அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படுமென எச்சரிக்கை
அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
டீசல் தட்டுப்பாட்டுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும்.
டீசல் பற்றாக்குறையால் பேருந்து தொழில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
தனியார் பேருந்து சங்கங்கள் தவிர, பாடசாலை வான், கொள்கலன் லொறிகள் என அனைத்து போக்குவரத்து சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
பேருந்துகளுக்கான எரிபொருளை டிப்போக்கள் ஊடாக விநியோகிக்கும் முறையை இலங்கை போக்குவரத்து சபை உருவாக்கியுள்ளது.
எனினும் தற்போது தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை டிப்போ வழங்குவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
