பேருந்தில் இளம் யுவதிகள் செய்த மோசமான செயல்! விசாரணையில் வெளியான தகவல்
கண்டியிலிருந்து அம்பிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில் பெண்ணொருவரின் தங்க நகையை சூட்சுமமாக திருடிய மூன்று இளம் யுவதிகள் கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று யுவதிகளும் அம்பிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில் ஏறி ரது பொக்குவா சந்திக்கு செல்வதற்கு இரண்டு கிலோ மீற்றருக்கு முன்னதாக, அங்கு பயணித்த பெண்ணொருவர் கழுத்தில் தங்க நகை இல்லாததைக் கண்டு பேருந்தில் இருந்த சக பயணிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து எவரும் வெளியேற அனுமதிக்காது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் பேருந்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட மூன்று யுவதிகளை சோதனையிட்டுள்ளனர்.
பொலிஸாரிடமிருந்தும் அறிக்கை கோரல்
இதன்போது, யுவதி ஒருவரின் நாடாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க சங்கிலியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேருந்தில் பயணித்த 18-22 வயதுடைய மூன்று யுவதிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தங்க நகையினை பயணியின் கழுத்திலிருந்து கழற்றிய போது இரு யுவதிகள் குடைகளாலும் கைப்பைகளாலும் மூடியிருந்தமையும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட யுவதிகள் புத்தளம், திருகோணமலை மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸாரிடமிருந்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |