இந்த வருடம் பேருந்து கட்டணத்தில் மாற்றம்
இந்த வருடம் ஜூலை மாதத்திற்குள் பேருந்து கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“எரிபொருள் கட்டணத்தை குறைத்திருந்தால் நாங்கள் நிச்சயமாக பேருந்துக் கட்டணத்தை குறைத்திருப்போம். இந்த ஆண்டு தொடக்கத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று நாங்கள் நம்பினோம்.
பேருந்தின் விலை
எனினும், அவ்வாறு நடக்கவில்லை. குறைந்த பட்சம் 30 ரூபாவினால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் தான் எங்களால் பேருந்துக் கட்டணத்தை குறைக்க முடியும்.

இதேவேளை, பேருந்து உதிரி பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் தான் நாங்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளோம்.

அத்துடன், ஒரு பேருந்தின் விலை ஏறக்குறைய ஒரு கோடியே எழுபது இலட்சமாக உயர்ந்துள்ளது. இதனாலும் நாம் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam