சடுதியாக அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணங்கள்! வெளியான அறிவிப்பு
எதிர்வரும் புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் இன்று (22) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கட்டண திருத்தம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய, 15 முதல் 20 வீதத்தினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிப்பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த நிலையில்,பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமென
கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.