ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்
பேருந்து கட்டணத்தை உயர்த்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் பொது பேருந்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு கோரப்பட்டுள்ளது.
உதிரி பாகங்கள், லூப்ரிகண்டுகள், குத்தகை பிரீமியங்கள் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் அதிகரிப்பின் அடிப்படையில் பொது பேருந்து சங்கத்தினால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டணங்களை குறைக்கும் யோசனையை முன்வைக்க முடியாது
மேலும், தற்போதைய நிலையில் பேருந்து கட்டணங்களை குறைக்கும் யோசனையை முன்வைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் இந்த வாரத்திற்குள் வழங்கப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
|