பேருந்து கட்டணமும் அதிகரிக்கின்றது
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய செலவினங்கள் காரணமாக ஜூலை மாதம் நடைபெறவுள்ள வருடாந்த கட்டண திருத்தத்தின் போது குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக 40 ரூபாவாக இருக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து பேருந்து கட்டணங்களும் 50% அதிகரிக்க வேண்டும் என்றார்.
தற்போது நிலவும் எரிபொருள் நெரிசல் காரணமாக பேருந்துகள் அதிக விலைக்கு டீசலை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிடுகின்றார்.
தற்போதைக்கு பேருந்து கட்டண திருத்தத்தை எதிர்பார்க்கவில்லை எனவும், முறையான முறைமை தயாரிக்கப்படாவிட்டால் ஜூலை மாதத்திற்குள் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டியிருக்கும் எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam