32 ரூபாவாக உயர்த்தப்படும் குறைந்தபட்ச கட்டணம்: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பேருந்து கட்டணத்தை 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி பேருந்து பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் பேருந்து கட்டணங்கள் 25 - 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
விலைசூத்திரத்திற்கு அமைவாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னர் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டீசல் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டமையானது பேருந்து கட்டணங்களின் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கெமுனு விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
| இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: போக்குவரத்து கட்டண திருத்தத்திற்கு அனுமதி |
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam