பேருந்து கட்டண திருத்தத்தில் திடீர் மாற்றம்
பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த ஆணைக்குழு இன்று(01) அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையில் மாற்றம்
இன்று காலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்திருந்தது.
அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 366 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் 95 ஒக்டேன் ரக பெட்ரோலின் விலை 38 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 464 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு லீட்டர் இலங்கை வெள்ளை டீசலின் விலை 29 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 358 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |