புதிய பேருந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு! பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
எரிபொருள் விலைக்குறைப்பைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் 2.23 சதவீதத்தினால் குறைவடையும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி 40 ரூபாவாக இருந்த ஆரம்பக்கட்டணம் 38 ரூபாவாகக் குறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாறாக உயர்வான கட்டணம் அறவிடப்படும் பட்சத்தில் அதுகுறித்து பயணிகள் 1955 என்ற இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு அளிக்க முடியும் பேருந்து பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
எரிபொருள் விலை குறைப்பு காரணமாக பேருந்து கட்டணங்களை 2 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிரான்டா தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் விலை குறைப்பிற்கு ஏற்ற வகையில் விலைகளை குறைப்பதற்கான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைவாக பேருந்து கட்டண குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
திருத்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பான பரிந்துரை நேற்று போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்! வெளியான அறிவிப்பு |
பேருந்து கட்டண குறைப்பிற்கான பரிந்துரை
இதேவேளை, பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும், அதற்கான பரிந்துரைகள் வரும் வரையில் காத்திருப்பதாக அகில இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருவதுடன், புதிய பேருந்து கட்டணம் இன்று முற்பகல் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 17 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
