பேருந்துகளுக்கு பூட்டப்பட்டுள்ள அலங்கார பொருட்கள் தடை: திருகோணமலை தனியார் பேருந்து சங்கத்தின் கோரிக்கை
பேருந்து மேலதிகமாக பூட்டப்பட்டுள்ள அலங்கார பொருட்களை தடை செய்ய கோருவது வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல் என திருகோணமலை மாவட்ட தனியார் பேருந்து வரையறுக்கப்பட்ட சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று (13) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த சங்கத்தின் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
இதன்போது தெரிவித்த பேருந்து உரிமையாளர் ஒருவர், ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் அந்த மேலதிக பொருட்களை தடை செய்யலாம் ரூட்டில் வரும் வருமானத்தை விட வாடகை மூலமாக கிடைக்கும் வருமானமே அதிகம்.
வாடகை எடுத்தல்
வாகனத்தை வாடகை பிடிக்கும் போது ஆசன இருக்கை அலங்காரத்தை பொறுத்தே முன்னுரிமைபடுத்தி அதனை வாடகைக்கு பெறுவார்கள்.

இதனை விடுத்து ஒன்றுமில்லாமல் மரண வீட்டுக்கு செல்வது போன்று இருந்தால் யாரும் வாடகை பிடிக்கமாட்டார்கள். வாகனத்தில் உள்ள வெள்ளிரும்பு தொலைக்காட்சி மின்குமிழ் போன்றன மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் உள்ளதுடன் எமது தொழிலை செய்து கொண்டு செல்கிறோம்.
இதை விடுத்து அரசாங்கம் மேலதிக பொருட்களை அகற்ற சொல்வதானது எமது வாழ்வாதரமும் அழிக்கப்படுவதுடன் அலங்கார வெள்ளிரும்பு பொருட்களை விற்பனை செய்பவர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்படுகிறது.
இதனால், வருமானமிழந்து காணப்படுகிறது. இல்லாது போனால் எமக்கு உழைத்து தரும் அரசாங்கம் வேண்டும் என்றார். குறித்த கலந்துரையாடலில் பேருந்து உரிமையாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri