பேருந்து சாரதிகளிடம் அதிகரிக்கும ஐஸ் பாவனை.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
ஐஸ் போதைப்பொருள் பாவித்ததாக 26 பேருந்து சாரதிகள் கடந்த மாதங்களில் கைது செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சோதனைகளில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியமை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதி விபத்துகளைக் குறைப்பதில் பொலிஸார் பெரும் சவாலை எதிர்கொள்வதாகத் தெரிகிறது.
பேருந்து சாரதிகள் அதிகளவில் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை (20), மொரட்டுவ பொலிஸார், போதைப்பொருட்களுக்கு அடிமையான ஒரு சாரதியை அடையாளம் கண்டுள்ளனர்.
ஆபத்தான நிலைமை
அவர் 45 பயணிகளுடன் ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்புக்கு ஒரு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். ஒரு இரகசியத் தகவலின் பேரில், பொலிஸார் பேருந்தை நிறுத்தி சாரதியை சோதனை செய்துள்ளனர்.
அவரது சிறுநீர் மாதிரியை சோதனை செய்த போது, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டது.
இதேவேளை, சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் ஹெரோயினும் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. வாகனம் ஓட்டும்போது தூக்கத்தை தவிர்க்க ஐஸ் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதாக குறித்த சாரதி தெரிவித்துள்ளார்.
இது அதிகரித்து வரும் ஆபத்தான நிலைமையாகும். பல ஓட்டுநர்கள் போதைப்பொருள் பரிசோதனையின் போது பொலிஸாரின் வரம்புகளை சாரதிகள் அறிந்துள்ளதால், பேருந்து சாரிகள் சட்டத்தை மீறுவது போல் தெரிகிறது.
கட்டாய தேவை
இது பொலிஸாருக்கு ஒரு சவாலாகவும், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்குப் பாரிய ஆபத்தாகவும் உள்ளது.
ஒரு சாரதி மது அருந்தியிருந்தால், அதைக் கண்டறிவது எளிது, ஆனால் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதை கண்டறிவது மிகவும் கடினம்," என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனை விரைவாக அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாய தேவையாகவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



