பயணச் சீட்டு வழங்காத பேருந்து நடத்துனருக்கு நேர்ந்த கதி
பயணி ஒருவருக்கு பயணச் சீட்டு வழங்காத பேருந்து நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் இருந்து கம்பளை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டை விசாரித்த போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
பணி நீக்கம்
மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மதுபானி பியசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மத்திய மாகாண தனியார் போக்கு வரத்து அமைச்சில் பதிவு செய்யப்பட்ட வீதிப் போக்குவரத்து தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர், பயணி ஒருவருக்கு பயண சீட்டு வழங்காது இருந்ததுடன் அவரை தூற்றியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து மேற்படி நடத்துனரை போக்குவரத்து அதிகார சபை பணி நீக்கம் செய்துள்ளது.

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
