நாட்டில் டெங்கு நோயை கட்டுப்படுத்த கியூபாவில் இருந்து விசேட திட்டம்
நாட்டில், டெங்கு அச்சுறுத்தலை இல்லாதொழிக்கும் நோக்கில் நிலையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் கியூபா (Cuba ) அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபாவுடனான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் குறித்து, நீண்ட காலமாகவே கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
தற்போதுள்ள நீர் மட்டம் முழுமையாக வடிந்தவுடன் சுகாதார அமைச்சினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்தநிலையில், டெங்கு கொசுவை கட்டுப்படுத்த கியூபாவில் இருந்து BTI பக்டீரியா மாதிரிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

BTI பக்டீரியாவைப் பயன்படுத்தி டெங்குப் பிரச்சினையை முற்றாக ஒழிக்க முடியாது என்றாலும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த முறையாகும் என ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளார்.
கியூபாவிடமிருந்து பி.டி.ஐ பக்டீரியாவை, நன்கொடையாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan