இலங்கையில் மேலும் ஒரு பேருந்து விபத்து - இருவர் பலி
குருநாகல் - அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(10.07.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரகலவிற்கு யாத்திரைச் சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த யாத்திரைகள் பயணித்த பேருந்தானது அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை விபத்து
இந்நிலையில், பொலன்னறுவை, மனம்பிட்டிய, கொட்டலிய பாலத்தில் மோதி பேருந்து கவிழ்ந்து நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், பூண்டுலோயா, துனுகெதெனிய - மடகும்புர வீதியின் வளைவில் நேற்று மாலை பேருந்து ஒன்று 50 சுமார் அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
