வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோதி ஒருவர் படுகாயம்
வவுனியா - குழுமாட்டுச்சந்தியில், இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வீதியில் சென்று கொண்டிருந்த நபரை மோதியுள்ளது.
இந்த நிலையில் படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் இன்றைய தினம் (28.04.2023) தெரிவித்துள்ளனர்.
குழுமாட்டுச்சந்தியில் வீதியினை கடக்க முற்பட்ட நபரை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோதியுள்ளது.
படுகாயமடைந்த நபர் விபத்து பிரிவில் அனுமதி
இவ்விபத்தில் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெளுக்குளம் பொலிஸார் சாரதியினை கைது செய்துள்ளதுடன், பேருந்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
