திருகோணமலையில் விபத்து! ஒருவர் பலி
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியுடன் அரச பேருந்து மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது இன்று (10.04.2023) இடம் பெற்றுள்ளது.
குறித்த நபர் துவிச்சக்கர வண்டியுடன் மஞ்சற்கோட்டை கடக்க முற்பட்ட போது பிரதான வீதியில் வந்த பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து சாரதி கைது
விபத்தில் படுகாயமடைந்த 36 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக் குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.