50 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து: 24 பேர் காயம் (Photos)
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – வட்டக்கொடையில் இருந்து மடக்கும்புர பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (09.07.2023) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்துள்ளதுடன், இதில் காயமடைந்த 21 பேரை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தோட்ட பணியாளர்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்
இதனையடுத்து அதிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று பேர் பூண்டுலோயா மல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூண்டுலோயா வேவஹேன பிரதேசத்தில் இருந்து வட்டகொட தோட்டத்திற்கு பணிபுரிய சென்றவர்களே இவ்வாறு பணியை முடித்துக்கொண்டு மீண்டும் பேருந்தில் வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri