மொனராகலையில் விபத்துக்குள்ளான பேருந்து : பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்
மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச.) பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 26 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது இன்று(29.05.2026) நேர்ந்துள்ளது.
26 பேர் பலத்த காயம்
மொனராகலையிலிருந்து கொட்டியாகலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே இன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31ஆம் கட்டை சந்தி பகுதியைச் சென்றடைந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் வேகம் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் கொடூர விபத்தின் போது பேருந்தில் பயணித்த 26 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்து நடந்தவுடனே அந்தப் பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு, அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்த மொனராகலை பொலிஸார், விபத்துக்கான சரியான காரணம் ஓட்டுநரின் அதிக வேகமா அல்லது பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறா என்பது குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan