சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து விபத்து: 12 பேர் பலி
ஹங்கேரியின் கிழக்குப் பகுதியில் உள்ள M3 அதிவேக நெடுஞ்சாலையில் போலந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்தானது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த விபத்தில் 10 பேர் கடுமையாகக் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து
செர்பியாவில் இருந்து போலந்து நோக்கி பயணித்த இப்பேருந்தில் 57 பயணிகளும் இரண்டு சாரதிகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்திலேயே 11 பேர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 37 பேர் இலேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சாரதி தூங்கியமையினாலேயே இப்பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹங்கேரி பிரதமர் பீட்டர் மக்யார், போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.