முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படும் விவகாரம்.. வெளியான தகவல்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவிற்கு வரமாட்டார் என்று பங்களாதேஷில் அரசு உறுதி செய்துள்ளது.
2024ஆம் ஆண்டு போராட்டங்களில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் பிரதமரை, இந்திய அரசு அவரது நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் வரை, பிரதமர் இந்தியாவிற்கு வரமாட்டார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தைக் கவிழ்த்த, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு அவர் அண்டை நாடான இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார்.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பங்களாதேசில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரை நாடு கடத்துமாறு பங்களாதேஷ் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.
வெளியான தகவல்..
பங்களாதேஷில் ஒப்படைக்கக் கோரிய அதன் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என்று இந்தியா முன்னதாகக் கூறியிருந்தது.

கடந்த பெப்ரவரியில் பதவியேற்ற பிரதமர் தாரிக் ரஹ்மான், பங்களாதேஷ தலைவர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மரபை மீறி, மலேசியா மற்றும் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த வாரம் இந்திய உயர் ஆணையர் பிரதமர் ரஹ்மானை சந்தித்த பிறகு சில முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கைகள் இருந்தபோதிலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் தொடர்ச்சியான ஊடக சந்திப்புகளால் இந்த செயல்முறை தடைபட்டுள்ளதாக பங்களாதேஷ் கூறுகிறது.
தனது 15 ஆண்டு கால ஆட்சியில் சர்வாதிகாரியாக இருந்ததாக விமர்சிக்கப்பட்ட ஹசீனா, சிறைத்தண்டனையை எதிர்கொண்டாலும் டிசெம்பரில் பங்களாதேஷிற்கு திரும்புவதாக இந்த மாத தொடக்கத்தில் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.