மன்னாரில் தீக்கிரையாக்கப்பட்டுள்ள மீன் வாடிகள் (VIDEO)
மன்னார் - பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியில் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட மீன் வாடிகள் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 3 வாடிகள், 25 குதிரை வலு கொண்ட 3 மீன்பிடி இயந்திரங்கள், பெறுமதிமிக்க நண்டு, சூடை, கிளைக்கன் மீன் வலைகள் போன்ற பல பெறுமதியான பொருட்கள் என்பன தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை: நா.வர்ணகுலசிங்கம் |
பாதிக்கப்பட்டவரின் முறைப்பாடு
சம்பவ தினத்திற்கு முதல்நாள் தனி நபர் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த நபர் இந்த நாசகார வேலையை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அங்கு உரிய நீதி கிடைக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நேற்றைய தினம் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிடுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சென்றுள்ளனர்.
கடற்தொழிலாளர்களின் கோரிக்கை
கடந்த புரேவிப் புயல் பாதிப்பு, கோவிட் தோற்றால் தொழில் இழப்பு காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு தொழில் செய்வதற்கு கடன் அடிப்படையில் பெறப்பட்ட உபகரண பொருட்களையே விஷமிகள் தீயிட்டு கொளுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய பொருளாதார, எரிபொருள் தட்டுப்பாடு காலத்தில் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின்
குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான நிலை என்ன எனவும், பொலிஸாரும் கடற்தொழில்
திணைக்கள அதிகாரிகளும் தங்களுக்கு நீதியை பெற்று தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
