கனடாவில் அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடா ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வங்கி அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு உதவும் இயந்திரங்கள் இவ்வாறு திருடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு வியாபார நிறுவனங்கள்
இந்நிலையில் அதிகளவில் சிறு வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறு வியாபாரங்களில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் கூறப்படுகின்றது.
கடந்த 2023ஆம் ஆண்டு சுமார் 300 சிறு வியாபார நிறுவனங்களில் கடன் அட்டை இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான களவுச் சம்பவங்களினால் சில நிறுவனங்கள் 50,000 டொலர்கள் வரையில் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |