வெளிநாடொன்றில் மக்கள் போராட்டத்தினால் பதவி விலகிய அரசாங்கம்
பல்கேரியாவில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்தின் காரணமாக அரசாங்கம் பதவி விலகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரோசென் ஷெல்யாஸ்கோவ் தலைமையிலான அரசு பதவி விலகியுள்ளது.
தலைநகர் சோஃபியா நகர மையம் உள்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் முன்னெடுத்ததனை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறவேற்றப்படவிருந்த நிலையில் அரசாங்கம் பதவி விலகியுள்ளது.

பல்கேரியா யூரோ நாணய கொடுக்கல் வாங்கல் முறையில் இணைய இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் குடிமக்களின் குரலுக்கு செவிசாய்ப்பதாக பிரதமர் ஷெல்யாஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இளையவர் முதல் முதியவர்கள் வரையிலான அனைவரும் அரசாங்கத்தை பதவி விலக கோரியுள்ளதாகவும் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து பதவி விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அமைச்சரவைக்கு பதவி ஏற்கும் வரையில் தற்போதைய அமைச்சர்கள் தங்களது பொறுப்பில் தொடருவார்கள் என அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரியில் பதவியேற்ற பிரதமர் ஷெல்யாஸ்கோவ் அரசு ஏற்கனவே ஐந்து நம்பிக்கையில்லா தீர்மானங்களை மீண்டு வந்திருந்தாலும், இந்த முறை அரசியல் அழுத்தம் அதிகரித்தது.
கடந்த வாரம் நாட்டின் ஜனாதிபதி ரூமென் ரதேவ் கூட அரசு பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
பல்கேரியா 2026 ஜனவரி 1 ஆம் தேதி யூரோவில் இணையவிருக்கிறது. இந்த அரசியல் நெருக்கடி யூரோ இணைப்பை பாதிக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri