முல்லைத்தீவில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் கட்டடம் திறந்து வைப்பு
முல்லைத்தீவின் (Mullaitivu) மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் கொல்லவிளாங்குளம் கிராமத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆதரவுடன் தன்னார்வமாக இயங்கி வரும் நிறுவனமொன்றின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளதுடன் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டதோடு மாணவர்களும் பங்கெடுத்து சிறப்பித்து இருந்தனர்.
நிகழ்வின் உரைகள்
நிகழ்வில் நிறுவன பணியாளரினால் வரவேற்புரை வழங்கப்பட்டுள்ளதோடு தலைமை உரையில் நிறுவனத் தலைவரால் நிறுவனத்தினூடாக எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கருத்துரைத்த கண்டாவளையினைச் சேர்ந்த பெண் முயற்சியாளர் ஒருவருவரினால் பனம்பொருள் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாடுகள், நன்மைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளும் பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட 50 பயனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நிறுவனப் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.