சஜித் பிரேமதாசவினால் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்ட கட்டிடம்! (Video)
வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் தையிட்டி கலாவல்லி முன்பள்ளியின் புதிய கட்டடத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது மாணவர்கள் சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த கட்டடம் "றாகம" நிறுவனத்தின் அணுசரனை ஊடாக நோர்வே HETLAND பல்கலைக்கழக மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் கடந்த 2020.8.3ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமா சந்திரபிரகாஸ், மாவட்ட அமைப்பாளர் வ.பிரபாகரன், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
