பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சுலபமான விடயமல்ல! பிரதமரின் பகிரங்க அறிவிப்பு- செய்திகளின் தொகுப்பு
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப டொலர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் தற்போது டொலர் கையிருப்பானது பூச்சியமாகவே காணப்படுகிறது, இதனைக் கட்டியெழுப்புவது சுலபமான விடயமல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,"நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளையும் உள்ளடக்கிய கூட்டுத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் அரிசியை இறக்குமதி செய்து, குறைந்த விலையின் கீழ் மக்களுக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்தோடு, சீனி, கோதுமை, பருப்பு, பெரிய வெங்காயம், கடலை, காய்ந்த மிளகு, கடுகு போன்ற 112 பொருட்களை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,