கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட செட்டிகுளம் பிரதேச சபையின் பாதீடு வெற்றி (Photos)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குளால் வெற்றி பெற்றுள்ளது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று சபைத் தவிசாளர் சு.ஜெகதீஸ்வரனால் (S.Jegatheeswaran) முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து பாதீடு தொடர்பாக சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
இதன்போது பாதீட்டினை வாக்கெடுப்புக்கு விடுமாறு உறுப்பினர்கள் கோரியதையடுத்து, வாக்கெடுப்புக்கு விடப்பட்டப்பது.
பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 05 உறுப்பினர்களும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 03 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் 01 உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் 01 உறுப்பினரும் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.
பாதீட்டுக்கு எதிராக இலங்கை சுதந்திரக் கட்சியின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் ஆக 6 பேர் வாக்களித்தனர்.
இதனால் 4 மேலதிக வாக்குகளால் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றிபெற்றது. பொதுஜனபெரமுனவின் ஒரு உறுப்பினர் பாத்தீட்டு வாக்கெடுப்பின் போது நடுநிலைமை வகித்திருந்தார்.
இதேவேளை, இலங்கை சுதந்திரக் கட்சியின் ஆளுகைக்குள் இருந்த செட்டிகுளம் பிரதேச சபையின் பாதீடு கடந்த வருடம் தோற்கடிக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று
தேசிய காங்கிரஸின் ஆளுகையிலுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டத்திற்கான விசேட பொதுச்சபை அமர்வு இன்று (14) செவ்வாய்க்கிழமை முற்பகல் வேளையில் மாநகர முதல்வர் அதா உல்லா அகமட் ஸகியின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆளும் தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுடன் - சபையினை பிரதிநிதித்துவபடுத்தும் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்களும் 2022 இற்கான பாதீட்டினை ஆதரவளித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
2021 ம் நிதி ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தினை கட்சி பேதமின்றி ஆதரித்து அங்கீகாரம் வழங்கியது போல், 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினையும் அமோகமாய் ஆதரித்து அவற்றில் குறித்தொதுக்கப்பட்ட காத்திரமான மக்கள் நலனோம்பும் செயற்திட்டங்களை அமுல்படுத்தவென ஆணை வழங்கியிருக்கும் சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநகர பிதா நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
வரவு- செலவுத் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநகர சபை உறுப்பினர்கள் 2022 பாதீடு குறித்து தமது உளமார்ந்த நன்றிகளையும், பாராட்டுதல்களையும் சபையில் முன் வைத்த அதே வேளை, மாநகர முதல்வருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
