கொழும்பு மாநகர சபை பாதீட்டில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம்
கொழும்பு மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாது வரவு செலவுத்திட்ட விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நேரம் வழங்காததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் முதல் பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில் இன்று (31.12.2025) மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.
கூச்சல் குழப்பம்
விவாதத்தின் போதே கூட்டு எதிர்க்கட்சிகளின் தலைவர் மன்சில் உரையாற்றும் போது குறிக்கப்பட்ட நேரம் வழங்காததால் தான் சபையை நடத்த விடமால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு வெளிநடப்பு செய்வேன் என தகாத வார்த்தைகளில் பேசியதால் மேயருக்கும் அவருக்கிடையில் வாக்குவாதம் சில நேரம் நீடித்தமையால் பதற்றம் ஏற்பட்டது.

அதன் பின்னர் கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் கிடைத்துள்ளன.
குறித்த வரவு செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.