இருமுறை தோல்வி கண்ட வரவுசெலவு திட்டம் ஆளுநரின் தலையீட்டால் நிறைவேற்றம்!
இரண்டு முறை தோல்வி கண்ட 2022 ஆண்டுக்கான தலவாக்கலை லிந்துலை நகரசபையின் வரவு செலவு திட்டம் ஆளுநரின் தலையீட்டால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் லெச்சுமணன் பாரதிதாசம் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை லிந்துலை நகரசபையின் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தலவாக்கலை லிந்துலை நகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த சபை அமர்வுகளின் போது இரண்டு முறை தோல்வி கண்டது .
மக்களின் சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு அமைய ஆளுநரின் அதிகாரத்திற்கமைய உள்ளுராட்சி 178 இலக்க சட்டத்திற்கமைய 2261-3 இலக்கத்தினை கொண்ட அதி விசேட வர்த்தமானியின் 2022.01.03 திகதி வெளியிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவு திட்டம் தொடர்பாக ஆளுநர் மக்கள் சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சபை உறுப்பினர்களிடம் கலந்துரையாடி மத்திய மாகாண ஆளுநரினாலும் உள்ளுராட்சி ஆணையாளரினாலும் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த வரவு செலவு திட்டத்தினை நேற்று (07) நடைபெற்ற சபை அமர்வின் போது முன்வைக்கப்பட்டு சபை அங்கத்தவர்களின் அங்கிகாரமும் நேற்று பெறப்பட்டுள்ளது.
இதன்போது வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உதவிய
ஆளுநர்,உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு தாம் நன்றி
தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 12 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam