ஞானசார தேரருக்குப் பதிலாக கஸ்ஸப தேரரா..! பொருளாதார விமர்சனங்களுக்கு நாளை சபையில் ஜனாதிபதி பதிலடி
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் உள்ள நிலையில், SLPP-யின் அடியாளாக தற்போது பலாங்கொட கஸ்ஸப தேரர் (Balangoda Kassapa Thero) பயன்படுத்தப்பட்டு வருகின்றார் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் 'நேருக்கு நேர்" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு இருப்பதற்கு நிலையான இடம்கூட இல்லாத நிலையில், இதுபோன்ற கைக்கூலி வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்.
கொழும்பில் வெள்ளம் ஏற்படுவதற்கு அரசாங்கம் காரணம் எனக் கூறுபவர்களுக்கு, ஒவ்வொரு தனி மனிதனின் ஒழுக்கமும் இதில் பங்கு வகிக்கின்றது என்பது தெரியாது. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இருந்த நடைமுறைகளை தற்போது நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதற்கு ராஜபக்சர்களே காரணம்.
சாதாரண மக்களைக் குப்பைக்காகக் கைது செய்யும் எண்ணம் அநுர அரசாங்கத்திற்கு இல்லை. மாறாக, நாட்டில் தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான விமர்சனங்களுக்கு, நாளைய தினம் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டம் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.
சுற்றுலா விசாவில் செல்ல வேண்டாம்..! வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை