வரவு செலவுத்திட்டத்தில் நாட்டின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு இல்லை-ஐ.மக்கள் சக்தி
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில் நேற்று சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் வாழ்க்கை செலவு பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை

நாடு எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினை, மக்களின் வாழ்க்கை செலவு பிரச்சினை மற்றும் மக்களின் வாழ்க்கை பாதுகாப்பது தொடர்பாக எவ்வித யோசனைகளும் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.
அத்துடன் இந்த வரவு செலவுத்திட்டம் ஒரு இலக்கோ, நோக்கமோ இல்லாத புஷ்வாணம். அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் நாட்டு மக்கள் மீது வரிகளை விதித்தது.
வரவு செலவுத்திட்டத்தில் உழைக்கு மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டு வந்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் எதுவுமில்லை.
மேலும் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் கமத்தொழிலாளர்களுக்கோ, மீனவர்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ, அரச ஊழியர்களுக்கோ எவ்வித நன்மையும் வழங்கப்படவில்லை எனவும் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.