வரவு செலவுத்திட்டம் 135 வாக்குகளால் நிறைவேற்றப்படும்-வஜிர அபேவர்தன
வரவு செலவுத்திட்டம் 135 வாக்குகளை பெற்று நிறைவேற்றப்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்கால சந்ததிக்கும் நலன் தரக்கூடிய வரவு செலவுத்திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்முறை கொண்டு வரும் வரவு செலவுத்திட்டமானது, வங்குரோத்து அடைந்த நாட்டை பொருளாதார ரீதியாக விடுதலை செய்யும் வரவு செலவுத்திட்டமாக இருக்கும்.
அத்துடன் எதிர்கால சந்ததிக்கும் நலன் தரக்கூடிய வரவு செலவுத்திட்டம் என்பதுடன் ஏமாற்றும் ஆவணமாக இருக்காது எனவும் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.
யார் வந்தாலும் வரவேற்க தயார்

அதேவேளை முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை வரவேற்க தயாராக இருக்கின்றீர்களா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள வஜிர அபேவர்தன, வரும் எவரையும் வரவேற்க தயார். எனினும் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.