வீடில்லாதோருக்கு மகிழ்ச்சிச் செய்தி! வடக்கு - கிழக்கில் 13,000 குடும்பங்களுக்கு வீடுகள்
வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் 10 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மீள்குடியேற்றம் போர் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியேற்றப்படாத சுமார் 13,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தக் குடும்பங்களை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மீள்குடியேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 4 பில்லியன் ரூபா ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவி
மலையக மக்களுக்கு 10,000 வீடுகள் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1 பில்லியன் ரூபா ஏற்கனவே நடைமுறையிலுள்ள வீட்டுத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்யாத டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு உதவி வழங்க 1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவின் அபரஞ்சிமுல்லை, சேராக்குளி, மங்களபுரம், கந்தசாமி நகர், நித்தியா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, திஸ்ஸமஹாராம, திவுலப்பிட்டிய மற்றும் திம்புலாகல உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இவ்வுதவி வழங்கப்படவுள்ளது.
2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் 20,000 மற்றும் 40,000 ரூபா நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட வீடுகளைப் பூர்த்தி செய்வதற்கு 5 பில்லியன் ரூபா ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அபிவிருத்தி செய்யும் திட்டம்
இதன் கீழ் தகுதியான ஒவ்வொரு பயனாளிக்கும் அதிகபட்சமாக 5 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும்.
குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புறக் குடும்பங்களுக்கு சுமார் 50,000 வீடுகள் தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 16,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 5,000 வீடுகள் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
2027ஆம் ஆண்டில் பின்வரும் பகுதிகளில் அரைகுறையாக உள்ள வீட்டுத்திட்டங்களைப் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

டொரிங்டன் கொழும்பகே மாவத்தை கொலன்னாவ பேலியகொடை மொரட்டுவ மகரகம தெமட்டகொடை மேலும், குருநாகல் மீத்தொட்டமுல்ல மற்றும் வில்கொட பகுதிகளில் 59 புதிய வீட்டுத் தொகுதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்காக மொத்தம் 26.82 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை மற்றும் யக்கல பகுதிகளில் நடுத்தர வருமானம் பெறுவோருக்கான இரண்டு புதிய வீட்டுத்திட்டங்களையும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை 2027ஆம் ஆண்டில் முன்விற்பனை முறையில் ஆரம்பிக்கவுள்ளது.
நகரங்களை ஒழுங்கமைக்கப்பட்ட நகர மையங்களாகவும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகவும் அபிவிருத்தி செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள 10 நகரங்கள்
யாழ்ப்பாணம் மாத்தளை ஹட்டன் மட்டக்களப்பு சிலாபம் தம்புத்தேகம வவுனியா எஹலியகொடை பதுளை மாத்தறை இந்த திட்டங்களுக்காக 2.7 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருகோணமலை, கந்தளாய், கல்முனை, தெஹிவளை, களுத்துறை, பாணந்துறை, மத்துகம, மகரகம, இரத்தினபுரி, கேகாலை, பண்டாரவளை, எல்ல, காலி, அக்குரஸ்ஸ, குருநாகல், புத்தளம், நாத்தாண்டிய, கிரிபத்கொடை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட 19 நகரங்களின் அபிவிருத்திக்காக மேலதிகமாக 5 பில்லியன் ரூபா ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 65 பில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலதிகமாக இந்நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நகர வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் கட்டமைப்புக்கு 1.25 பில்லியன் ரூபா நகர்ப்புறங்களில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் வடிகால் கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்கும் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு 1.25 பில்லியன் ரூபா பெறுமதியான பல்நோக்கு இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 625 மில்லியன் ரூபா அரசாங்கத்தின் பங்கு மூலதனமாக வழங்கப்படும். அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், சுயதொழில் புரிவோர் உள்ளிட்டோரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம், தனியார் துறை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து புதிய வீட்டுத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன.
இதன் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் 10,000 அடுக்குமாடி வீடுகளை நிர்மாணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
பாதுகாப்பான வீடமைப்பு வசதிகளையும் ஆரோக்கியமான நகர்ப்புறச் சூழலையும் உறுதிப்படுத்துவது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய இலக்காகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam