கருவாட்டுக்கு அதிரடி வரிக்குறைப்பு - அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகள் தொடர்பில் அநுரவின் அறிவிப்பு
பருப்பு, வெங்காயம் மற்றும் பால்மா உள்ளிட்ட இலங்கையில் அதிகளவில் நுகரப்படும் 10 அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளை நீக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2027 வரவு செலவுத் திட்ட உரையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறு வரிகளை நீக்குவதால் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தற்போதுள்ள வரிச் சட்டங்களில் காணப்படும் தெளிவின்மைகளை நீக்குதல், மாறிவரும் வணிக நடைமுறைகளுக்கு ஏற்ப சட்டங்களைத் திருத்துதல் மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்தியவசியப் பொருட்களுக்கான வரி
அதேவேளை, வரி செலுத்துவோரின் உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் வருமானத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், இறக்குமதி செய்யப்படும் கருவாட்டுக்கான விசேட பண்ட வரியை ஒரு கிலோகிராமுக்கு 100 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும், மாசிக் கருவாட்டுக்கான வரியை 302 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், மிளகாய் தூள் மற்றும் தூளாக்கப்படாத காய்ந்த மிளகாய் மீதான விசேட பண்ட வரியை ஒரு கிலோகிராமுக்கு 50 ரூபாவால் குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்புகள் 2026 நவம்பர் 13ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri