வரவு செலவுத் திட்டத்திற்கு மொட்டு தரப்பு எதிர்ப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, சானக சம்பத் மதுகொட மற்றும் தானும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரானவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த சானக,
வரவு செலவுத் திட்டம்
"எமது கட்சி இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கிறது.
நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் நீரின் தரம் குறைவடைந்துள்ளது.
எரிபொருளைக் குறைப்பதாக வாக்குறுதி மறுக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகளும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாங்கள் வாக்களிக்கிறோம்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |