வரவு செலவுத் திட்டத்தை தொடர்ந்து அவசரமாக ஒன்றுக்கூடிய எதிர்க்கட்சி!
வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று(17) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேடையில் வழங்கிய வாக்குறுதிகள்
இந்த கலந்துரையாடல் நிமித்தம், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று (17) நாடாளுமன்றத்தில் கூடியுள்ளனர்.
இந்த விசேட கூட்டத்தில் வரவு செலவுத்திட்டம் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரசாங்கம் தேர்தல் மேடையில் வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்றியுள்ளதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உந்துதல் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி முடிகிறதா.. புது சீரியலில் நடிக்க தொடங்கிய சுசித்ரா! அதுவும் வேறொரு சேனலில் Cineulagam
