தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு வேண்டும்: உணவுப் பொருட்களின் விலை குறையுமா
நாட்டில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமின்றி நாட்டு மக்கள் அனைவரும் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வரவு - செலவு திட்டம்
எனவே அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதை விட பொருட்களின் விலைகளைக் குறைப்பது சிறந்ததாகும்.
அதனை விடுத்து சம்பளத்தை அதிகரிப்பதாயின் அரச உத்தியோகத்தர்களது சம்பளம் மாத்திரமின்றி, தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.
சரியாக நோயை இனங்கண்டு அதற்கு சிகிச்சையளிப்பதற்கான யோசனையையே நாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.
எமது பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோமே தவிர, பொதுஜன பெரமுன சார்பில் வரவு - செலவு திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை.
எவ்வாறிருப்பினும் இந்த வரவு - செலவு திட்டம் மக்களுக்கு சிறந்ததாக அமைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |