யாழ் மக்களுக்கான தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி ரணில்
யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு முறையான தீர்வு காண உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு - கிழக்கில் வாழும் மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (13.11.2023) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகல்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதுவரை மக்கள் மீள்குடியேற்றம் செய்யாத இடங்களின் அபிவிருத்திக்கு 2, 000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு கடற்றொழிலாளர்களின் கடற்றொழிலை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 22 மணி நேரம் முன்

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
