வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம் (Video)
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 77 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 45 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர கட்சியும் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இதேவேளை, குழுநிலை அல்லது மூன்றாம் வாசிப்பு விவாதம் நாளை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றையதினம் மாலை 6:00 மணிக்கு நடத்தப்படும்.
முன்மொழியப்பட்ட திட்டத்தின் மூலம் தேசத்திற்கான புதிய பாதையை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
2024 நிதியாண்டுக்கான பட்ஜெட் பற்றாக்குறை 2,851 பில்லியன் என்பதோடு மொத்த வருவாய் 4,107 பில்லியனாகவும் மொத்த செலவினம் 6,978 பில்லியனாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, நாட்டில் மிகப்பெரியதொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது.
அதன் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களில் 2024ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
