கோட்டாபயவின் முன்னோர், சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக இலங்கையில் கட்டப்பட்டுள்ள விகாரை
பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக பொலன்னறுவையில் விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலஹெர - மினிபுரகம பகுதியில் முன்பள்ளியொன்றுக்கு அருகில் இவ்வாறு விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மினிபுரகமவை சேர்ந்த W.G.சந்திரசேன பண்டா (வயது 45) என்ற நபரே இவ்வாறு விகாரை அமைத்துள்ளதாக தெரியவருகிறது.
சுமார் பத்து இலட்சம் ரூபா செலவு
இந்த விகாரை சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் கூலி வேலை செய்து பெற்ற பணத்தில் இந்த விகாரையை கட்டியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை இந்த நபர் படைப்பிரிவின் கீழ் சேவையாற்றிய இராணுவ சிப்பாய் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதற்கு மேலதிகமாக, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை பிலிப் குணவர்தனவின் நினைவாக பிரசங்க பீடம் மற்றும் மேசை ஒன்றும் இவ்விகாரைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








