இலங்கை மக்களுக்காக கடவுளுடன் பேசும் பௌத்த பிக்கு! வியப்பில் மக்கள்
பாதுக்கே அஜித்தவன்ச என்னும் பௌத்தப் பிக்கு, தான் கடவுளுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த பௌத்த பிக்கு, தொலைபேசி மூலம் மேற்கொண்ட உரையாடல் ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலமைக்குத் தீர்வு காணும் நோக்கில் கடவுளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடவுளுடன் அடிக்கடி தான் பேசுவதாகவும் கடவுளிடம் கூறி மழையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரார்த்தனை
இந்நிலையில் உடவலவ பிரதேசத்திற்கு மழையை பெற்றுக் கொடுப்பதற்காகத் தான் அந்தப் பகுதிக்குச் செல்ல உள்ளதாகவும் அங்கு சென்று கடவுளிடம் வேண்டி மழையைப் பெற்றுக் கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு ஜென்மங்களில் தான் கடவுளாக மாற உள்ளதாகத் தெரிவித்துள்ள பௌத்த பிக்கு, அதற்காக பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
