இந்துக்களுக்கு உள்ள சுதந்திரம் பௌத்தர்களுக்கு இல்லையாம்! முன்னாள் அமைச்சர் அனுருத்த காட்டம்
இலங்கையில் இந்துக்களுக்கு உள்ள சுதந்திரம் பௌத்தர்களுக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனவாதமும் மதவாதமும்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,"ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான குழுவினர் ஆட்சியைக் கைப்பற்றினால், புலம்பெயர் தமிழர்களைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழர்களின் பகுதிகளில் உள்ள விகாரைகளும், இராணுவ முகாம்களும் அகற்றப்படும் என்று சுட்டிக்காட்டியிருந்தோம்.
தற்போது அத்தகைய செயல்களே இடம்பெற்று வருகின்றன. புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு ஏற்பவே அநுர அரசு செயற்பட்டு வருகின்றது.
இனவாதமும், மதவாதமும் நாட்டில் இருக்கக்கூடாது என்பதை நாங்கள் ஏற்கின்றோம். ஆனால், தெற்கில் இந்துக்களுக்கு இருக்கும் சுதந்திரம் வடக்கில் பௌத்தர்களுக்கும் இருக்க வேண்டும்."என தெரிவித்துள்ளார்.