வடக்கு - கிழக்கில் பௌத்தமயமாக்கலை கண்டுகொள்ளாத அரசாங்கம்! சுரேஷ் பிரேமச்சந்திரன் விசனம் (video)
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வடக்கு - கிழக்கில் பௌத்தமயமாக்கல் தொடர்பான அனைத்து விடயங்களும் உடன் நிறுத்தப்பட வேண்டும் என கோரியிருந்த போதும் இலங்கை அரசாங்கம் அதை கண்டுகொள்ளவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் விசனம் தெரிவித்துள்ளார்.
நேற்று (17.04.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்திடம் நாம் பௌத்தமயமாக்கலை திருத்தாது தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.
பௌத்தமயமாக்கல்
முக்கியமாக கிண்ணியா வெந்நீரூற்று, குருந்தூர்மலை விவகாரம், நெடுந்தீவு வெடுக்குநாறிமலை விவகாரம், கச்சத்தீவு விவகாரம் போன்று வடக்கு - கிழக்கு பகுதிகளில் தொடர் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தொல்பொருள் சின்னங்கள், நில ஆக்கிரமிப்பு, மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக எதிர்வரும் 25ஆம் திகதி கதவடைப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
