கச்சத்தீவில் பௌத்தமயமாக்கல்! தெலுங்கானா ஆளுநரின் நிலைப்பாடு
கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் இரண்டு புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூற முடியாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இடங்களிலும் ஒருசில பிரச்சினைகள் வரும்போது அதற்கு வழிபாட்டுத்தலங்களை அந்த பிரச்சினைக்குள் கொண்டுவரக்கூடாது என்பதே தமது கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை
எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் வழிபாட்டுத்தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை எந்த அரசாங்கமும் அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
