ஆசிரியர் இடமாற்றச் சபையை கலைத்த விவகாரம்! ஜனாதிபதிக்கு சவால் விடும் பௌத்த தேரர்
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் இடமாற்றச் சபையை கலைத்த விவகாரத்தில் பெளத்த தேரர் ஒருவர் ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கலைப்பதாக அரசாங்கம் நேற்று (17.03.2023) அறிவித்தது.
ஆசிரியர் இடமாற்ற சபையின் பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாகவும் குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் பாடசாலைகள் முடங்கிவிடும்
புதிய பாடசாலை தவணை ஆரம்பமானதும் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் அனைத்து ஆசிரியர் இடமாற்றங்களும் திட்டமிட்ட முறையில் எதுவித மாற்றங்களும் இன்றி மேற்கொள்ளப்படும் என ஆசிரியர் இடமாற்ற சபையின் உறுப்பினர் சங்கைக்குரிய யல்வல பன்னசேகர தேரர் சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
28 ஆம் திகதி முதல் அனைத்து இடமாற்றங்களும் நடைமுறைப்பபடுத்தப்படும். இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களை விடுவிக்காத அதிபர்கள் இருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். எமது நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்த முனைந்தால் நாடு முழுவதும் பாடசாலைகள் முடங்கிவிடும் என்று எச்சரிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

'வானத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள்' சர்வதேச நீதிமன்றத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்.! ரஷ்யாவிலிருந்து மிரட்டல் News Lankasri
