கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் புத்த விகாரை கட்டுப்படுமா..! குகதாசன் எம்.பி சீற்றம்
கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில் இன்று(22.07.2026) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளன.
இது தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கருத்து தெரிவிக்கையில்,
இந்த விடயம் தொடர்பாக தான் அரசாங்கத்தின் உயர் மட்டத்தோடு தொடர்புகொண்டு பேசிய போது அவர்கள் இந்த இடத்தில் புத்த விகாரை கட்டுப்படமாட்டாது என உறுதியளித்தார்கள்.
புத்த விகாரை கட்டும் பணி முறியடிப்பு
அத்துடன், தொல்பொருட்கள் சிதைவடையாமல் இருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.

எவ்வாறாயினும் 202 ஆம் ஆண்டின் நீதிமன்ற தீர்ப்புக்கமைய அந்த இடத்தில் எந்தச் சமய கட்டடங்களும் கட்டாதிருப்பதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தேன்.
இதேவேளை, நீதி மன்றத்தில் சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக வழக்குத் தாக்கல் செய்வதற்குரிய ஒழுங்குகள் மேற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.