புத்தரின் சிலைகளை ஆயுதமாக கொண்டு பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கை: ஸ்ரீகாந்தா

Sri Lankan Tamils Trincomalee Sri Lanka Politician Sri Lankan political crisis Buddhism
By Theepan May 13, 2023 01:02 PM GMT
Report

புத்தரின் சிலைகளை ஆயுதமாக கொண்டு தொல்பொருள் திணைக்கள அனுசரணையோடு நடத்தப்படும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் நீட்சியே திருகோணமலை மண்ணில் புத்தர் சிலை பிரதிஷ்டை என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி திருகோணமலை நகரில் கடற்கரை வீதியில், விளையாட்டு அரங்கிற்கு முன்னால் காணப்படும் நான்கு அரச மரங்கள் அமைத்திருக்கும் இடத்தில் புத்த பெருமானின் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வு இடம்பெற உள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

புத்தரின் சிலை

தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள நான்கு அடி உயரமான புத்தர் சிலையுடன் இலங்கைக்கு வந்துள்ள 50 பௌத்த பிக்குகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இலங்கையில் தமிழ் மக்களின் நீண்ட வரலாற்றில் முக்கிய இடம் வகித்து வந்திருக்கும் திருகோணமலை மண்ணில் இந்த புத்தர் சிலை நாட்டப்படுவதற்கு போலியான காரணங்கள் வரலாற்றை திரிபுப்படுத்தி முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக புத்தரின் சிலைகளை ஆயுதமாக பயன்படுத்தி தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையோடு தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் நீட்சியாகவே இந்த புத்தர் சிலை பிரதிஷ்டை நிகழ்த்தப்பட உள்ளது.

புத்தரின் சிலைகளை ஆயுதமாக கொண்டு பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கை: ஸ்ரீகாந்தா | Buddhist Occupation In Trincomalee

அரசாங்கத்தின் முழுமையான ஆதரவோடு தான் இது மேற்கொள்ளப்படுகின்றது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இருக்க முடியாது.

சிங்கள இனவெறியர்

இந்த இன - மத ரீதியிலான ஆக்கிரமிப்புக்கு எதிராக, தமிழர் தரப்பில் எழுப்பப்படும் குரல்களை மௌனிக்க வைக்கும் நோக்கத்தோடு வடித்தெடுத்த இனவெறியரான அரசாங்கக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மிரட்டல் தொனியில் நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

குறித்த நிகழ்வை தடுத்து நிறுத்த முயன்றால், பாரிய அழிவுகள் ஏற்படும் என்றும் அவர் கர்ச்சித்திருக்கின்றார்.

அவரைப் போன்ற சிங்கள இனவெறியர்களின் மிரட்டல்கள், நீண்ட பல வருடங்களாக தமிழ் மக்களுக்கு பழகிப்போன சங்கதிகளாக இருந்தாலும் கூட, இனக் குரோதத்தை தூண்டுகின்ற இத்தகைய பேச்சுக்களை, இவரும் இவரைப் போன்றவர்களும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் தொடர்ந்து நிகழ்த்தி வந்திருக்கின்றார்கள்.

புத்தரின் சிலைகளை ஆயுதமாக கொண்டு பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கை: ஸ்ரீகாந்தா | Buddhist Occupation In Trincomalee

மிக மேசமான கலவரம் வெடிக்கும்

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முன்வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கை பற்றி பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கடந்த காலங்களில் இலங்கை சந்தித்த கலவரங்களை விட மிக மேசமான கலவரம் வெடிக்கும் என தனக்கு உரிய பாணியில் மிரட்டல் விடுத்திருந்தார்.

நாட்டின் அமைதியை குலைக்க கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கும் இத்தகைய இனவெறிப் பேச்சுக்கள் தொடர்பில் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

புத்தரின் சிலைகளை ஆயுதமாக கொண்டு பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கை: ஸ்ரீகாந்தா | Buddhist Occupation In Trincomalee

தமிழ் மக்களின் கோரிக்கைகளை சாத்தியமான அளவுக்கு மட்டுப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இவ்வித இனவெறி எச்சரிக்கைகள் உதவும் என்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் நம்புவதே இதற்கு காரணமாகும்.

திருகோணமலை நகரில் புத்தர் சிலை

இப்பொழுது திருகோணமலை நகரில் புத்தர் சிலையை முன்நிறுத்தி சிங்கள பௌத்த பேரினவாதம் தன் விஸ்தரிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முனைகின்றது.

இந்தச் சூழ்நிலையில், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் இந்தச் சவாலை நிதானத்தோடு எதிர்கொள்வதே உகந்தது ஆகும்.

தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்களை ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பித்து வைக்கவும் அதனை சாட்டாக வைத்து தமிழ்ப் பிரதேசமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அடக்கு முறையை மேலும் இறுக்கிக் கொள்ளவும் நிகழ்ச்சிநிரல் தீட்டப்படுவதாகவே சந்தேகிக்க வேண்டி உள்ளது.

புத்தரின் சிலைகளை ஆயுதமாக கொண்டு பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கை: ஸ்ரீகாந்தா | Buddhist Occupation In Trincomalee

நாட்டில் நிலவும் நெருக்கடி

நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் நெருக்கடி மிக்க சில பிரச்சினைகளுக்கு உடனடிப் பரிகாரமாகவும் இதனை சில சக்திகள் கருதக்கூடும்.

ஏனெனில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பரவலாக தீவிரப்படுத்தப்படும் புத்தர் சிலை விவகாரங்கள் ஒன்றும் தானாக முளைத்தவை அல்ல, இவற்றின் பின்னால் சில மறைகரங்கள் செயற்படுவதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அந்த மாவட்டத்தோடு மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்களை தழுவிய நிலையில் ஒற்றுமையாக எதிர்கொள்வதே இப்போது தேவைப்படுகின்றது.

புத்தரின் சிலைகளை ஆயுதமாக கொண்டு பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கை: ஸ்ரீகாந்தா | Buddhist Occupation In Trincomalee

இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தே சமீபத்தில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் உணர்த்தி நிற்கும் செய்தியாகும்.

கட்சி வேறுபாடின்றி தமிழ் மக்களை அணிதிரட்டி பாதிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் மக்களின் ஆதரவையும் கோரி பாரிய அரசியல் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதே என்பதே இன்றைய உடனடித் தேவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.          

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US