துயரம் தோய்ந்த வரலாறு: முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்திய பௌத்த பிக்குகள்
தமிழர் தாயகங்கள் எங்கும் கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.
இந்தநிலையில், விசுவமடு சுண்டைகுளம் சந்தி பகுதியில் வர்த்தகர்கள் இளைஞர்கள் இனைந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கியுள்ளனர்.
இதனை சில பௌத்த பிக்குகள் அருந்தியுள்ளனர்.
அவர்கள் இந்த செயலின் மூலம் இன அமைதிக்கும், புரிந்துணர்வுக்கும் தாங்கள் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்வு, முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தலின் ஒரு முக்கியமான கட்டமாகவும், பௌத்த பிக்குகள் செய்த இந்த செயல் தமிழ் மக்களிடையே உணர்வுப்பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது.
பௌத்தர்களின் இந்த ஆதரவு, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
