பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட பிக்கு (PHOTO)
பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியல் இன்று காலை கதிர்காமம் கிரிவேஹெர விகாரையில் வழிபாட்டில் ஈடுபடும் பிக்கு ஒருவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த பௌத்த பிக்கு, அண்மைய காலத்தில் ஜனாதிபதியின் நியமித்த முக்கியமான ஆணைக்குழு ஒன்றின் தலைவர் பதவியை வகிப்பவர் என பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த காலத்தில் அதிகளவிலான பிரசாரங்களை மேற்கொண்டு தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பங்களிப்பை வழங்கிய பல பௌத்த பிக்குகளுக்கு சமூகத்திற்குள் எதிர்ப்புகள் வலுத்து வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் சுயமாக முன்வந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் இடங்களுக்கு செல்லும் இவ்வாறான பௌத்த பிக்குகள் மக்களால் விரட்டப்படும் சம்பவங்களும் அண்மையில் நடந்தன.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri