திருகோணமலையில் சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால் நேற்று(27) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பௌத்தப்பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம்.
துறைமுக அதிக அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி ஊடாக இதுவரை 4445 குடும்பங்களை திட்டம் என்ற நோக்கில் விரட்டி அடிப்பதற்கு தற்போது செயற்திட்டங்கள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள்
கடந்த காலங்களில் திமுதுகம கரடிபுல் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விரட்டும் நடவடிக்கையில் நீதிமன்ற கட்டளைகளை எடுத்துக்கொண்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானித்தோம்.
அதேபோன்று சமன்புற கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சட்டங்களை பயன்படுத்தி அவர்களை எழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்படி எங்களை மக்களுக்கு தெளிவூட்டும் விதத்திலேயே திருகோணமலை கோகனபுர காக்கும் அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
மேலும் திருவண்ணாமலையில் பௌத்த மக்களுக்கு இடம்பெற்று வரும் நிகழ்ச்சி நிரல்களும்.மாவட்டத்தில் 1008 சிவலிங்கங்களை வைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் சிங்கள மக்களின் காணிகளுக்குரிய உறுதி பத்திரங்கள் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும் தொல்பொருளுக்குரிய இடங்களை சேதமாக்குவதை கண்டித்தும் எங்களுடைய எதிர்ப்பினை மேற்கொண்டு வருகின்றோம்.
திருகோணமலையில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பலர் முயற்சித்து வருவதாகவும் அதற்கு இடம் அளிக்க மாட்டோம் எனவும் திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பின் பிரதானி இதன் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்தப்பிக்குகளுக்கு வலுவூட்டும் விதத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
